இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3373ஆக உயர்ந்துள்ளது.

ஓமான்,கட்டார், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் லெபனானில் இருந்து வந்த 8 பேர் இன்று கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இந்தநிலையில் வைத்தியசாலைகளில் தொற்றாளிகளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 130 ஆகும்.

கொரோனா தொற்றில் இருந்து இன்று 20 பேர் குணமாகிய நிலையில் மொத்தமாக தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3230ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை,இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, இதுவரை 34பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.