மைத்திரி எடுத்த முடிவுகளில் யாரும் தலையிட முடியாது என்ற நிலை காணப்பட்டது! பூஜித வாக்குமூலம்

Report Print Ajith Ajith in சமூகம்

தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களில் சில முடிவுகளை எடுத்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எவரும் அந்த முடிவுகள் குறித்து முரண்பட்ட கருத்துக்களை கூறவில்லை.

அத்துடன் பரிந்துரைகளையும் வழங்கவில்லை என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட அந்த முடிவுகளை விமர்சிப்பது நல்லதல்ல என்பதே பாதுகாப்பு பேரவையின் கருத்தாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு பேரவையில் முன்னாள் ஜனாதிபதி எடுத்த முடிவுகளுக்கு யாரும் எந்த ஆலோசனையும் அளிக்காத சூழ்நிலை இருந்தது.

அவர் எடுத்த முடிவுகளில் யாரும் தலையிட முடியாது என்ற நிலையும் இருந்தது என்று பூஜித் ஜயசுந்தர கூறினார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர்,

2017 முதல் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தீவிரவாதத்தை பரப்பியபோது அது எங்கே முடிவடையும் என்று ஏன் புரியவில்லை என்று பூஜித்திடம் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த ஜயசுந்தர,

நிலைமை குறித்து தனக்கு நன்கு தெரியும், ஆனால் அந்த நேரத்தில் அரசியல் நிலைமை, அரசாங்க கொள்கையின் முன்னுரிமைகள் மற்றும் அவர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை தீவிரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதைத் தடுத்தன என்று தெரிவித்தார்.

எனினும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு, தனது உத்தரவின் படி இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து இரகசிய விசாரணைகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.