போர் குற்றம் செய்த 59 படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும்! ஜெனிவாவில் யோசனை

Report Print Steephen Steephen in சமூகம்
458Shares

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன உட்பட போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 படை அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்போலா டி. கிரைஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேலி பெச்லட்டிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இது குறித்து ஜெனிவா மனித உரிமை பேரவையில் கூறியுள்ளார்.

பெப்லோ டி கிரைஸ், 19 பக்கங்களை கொண்ட தனது அறிக்கையை கடந்த வாரம் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை படை அதிகாரிகளான 59 பேருக்கு எதிராக மனித உரிமை பேரவை சர்வதேச சட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த சட்டத்திற்கு அமைய போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளை வெளிநாடுகளில் கைது செய்ய முடியும்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வருவதை அந்நாடு தடை செய்துள்ளதுடன், கமல் குணரத்ன அவுஸ்திரேலியாவுக்கு வருவதினையும் அந்நாடு தடை செய்துள்ளது.