கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு

Report Print Ashik in சமூகம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த புகையிரதத்தில் மோதி இன்று அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிரிழந்தவர் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.