யாழ்.நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு நபரொருவர் பலி

Report Print Yathu in சமூகம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்பயணித்த புகையிரத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை கிளிநொச்சியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் எனத்தெரிவிக்கப்படுகிறது.

நபரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் கிடைக்காத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.