ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்றியது எப்படி?

Report Print Vethu Vethu in சமூகம்

பாணந்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவினை சில மணி நேரங்கள் மூடுவதற்கு நேற்று வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடந்த 4ஆம் திகதி அந்த வைத்தியசாசலையில் அனுமதிக்கப்பட்ட, தீவிர சிகிச்சை பிரிவில் சேவை செய்த தாதியின் மகளுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் தாதி, வைத்தியர்கள் மற்றும் 15 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட மாணவி ஆவார்.

கங்கொடவில பிரதேசத்தில் தனியார் இடம் ஒன்றில் இந்த மாணவி தங்கியிருந்துள்ளார். அவருடன் மேலும் இரண்டு மாணவிகள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

அந்த மாணவிகளில் ஒருவரின் உறவினர் மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். அவர் ஊடாகவே மாணவிக்கு கொரோனா தொற்றியதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.