வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்று 18 நாட்களுக்குள் லால் செனவிரத்ன அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தம்மிக்க பிரியந்த அவர்கள் கடந்த 20.09.2020 அன்று களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டு சென்ற நிலையில், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்ன கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

கடமையேற்று 18 நாட்களுக்குள் 23.09.2020 - 10.10.2020 கொழும்பு தலைமைக் காரியாலயத்தினால் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன அவர்களுக்கு கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.