களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Kanmani in சமூகம்

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மாணவரின் தந்தை மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர் எனவும், அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பீ.சீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.