கொரோனா அச்சுறுத்தல்! வவுனியாவில் மத்தியஸ்த சபை பிற்போடப்பட்டுள்ளது

Report Print Theesan in சமூகம்
40Shares

கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்டு வரும் நிலையில் மத்தியஸ்த சபை செயற்பாடுகளை பிற்போட்டுள்ளதாக வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் சி. வரதராஜா தெரிவித்துள்ளார்.

வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வரும் மஸ்தியஸ்த சபையின் செயற்பாடுகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூகத்தில் இயல்பு நிலை மீள் ஏற்பட்டதன் பின்னர் மத்தியஸ்த சபை மீள் ஆரம்பிப்பது தொடர்பிலும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.