தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்றிரவு தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவரும் மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.