பன்னல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Steephen Steephen in சமூகம்

பன்னல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்ட ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் கொத்தணி காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டவர்களால் பரவிய கொரோனா கொத்தணி பன்னல பிரதேசத்திலும் பரவியுள்ளது.

76 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.