அனலைத்தீவு மற்றும் காரைநகர் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிப்பு

Report Print Sumi in சமூகம்

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமான முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப் பிரிவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.