கொரோனா அச்சம்! பிரபல கிறிஸ்தவ மதத்தலம் ஒன்றிற்கு கடும் எச்சரிக்கை!

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பகுதியில் உள்ள பிரபல கிறிஸ்தவ மதத்தலம் ஒன்றில் 50 மேற்பட்ட நபர்களை கொண்டு ஆராதனை நடத்திய அதன் பொறுப்பாளருக்கு ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தேவ ஆராதனையில் 50 இற்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சமய தலம் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது 145 பேர் ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் குறித்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.