திருகோணமலையில் உயர்தர மாணவன் ஒருவர் தற்கொலை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னியடி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மூதூர், கிளிவெட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த சாதாரண தரப் பரீட்சையில் எட்டு ஏ மற்றும் ஒரு பி சித்தியை பெற்றுக்கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை (12) உயர்தரப் பரீட்டை நடைபெறவிருக்கும் நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு ,உயிரிழந்தமைக்கான காரணங்களை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.