ரியாஜ் பதியுதீன் விடுதலை குறித்து விளக்கமளிக்க இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக இரு பொலிஸ் அதிகாரிகளை முன்னிலையாகுமாறு சட்டமா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத்துறையின் உதவி பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணை அதிகாரி ஆகியோருக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை தமது அலுவலகத்துக்கு வரும் போது குறித்த விசாரணைகளுக்குரிய அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறும் சட்டமா அதிபர் கோரியிருப்பதாக அரச ஆலோசகர் நிஸாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ரியாஜ் பதியுதீன் தொடர்பற்றவர் என்று கூறியே பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். எனினும் ஆளும் கட்சியினர், அவரை கைது செய்ய வேண்டுமென்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.