கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல்

Report Print Ajith Ajith in சமூகம்
1138Shares

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பாடசாலையின் அறிவித்தல் பலகையும், யன்னல் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.சீ.டி.வி காணொளி காட்சிகளின் படி மூவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.