காவல்துறை பேச்சாளருக்கு உடனடி இடமாற்றம், மீண்டும் பேச்சாளராகிறார் அஜித் ரோஹன

Report Print Ajith Ajith in சமூகம்

காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர், வடமாகாண சிரேஸ்ட காவல்துறை உதவி அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒழுக்காற்று அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை 15 சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வன்னி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் பதில் காவல்துறை அதிபர் சி.டி விக்ரமரட்னவின் பரிந்துரையில் தேசிய காவல்துறையின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை உதவி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன, மீண்டும் செயல் காவல்துறை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.