கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ள ஶ்ரீ பாத கல்வியற் கல்லூரி

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன், பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ள நிலையில் இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று பொறுப்பேற்றுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்துடன், இங்கு தங்கியிருந்து கல்வி பயின்ற மாணவர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இராணுவம் 10 பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலையடுத்து நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே முன் பாதுகாப்பு ஏற்பாடாக ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.