மன்னாரின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அரசாங்கம் அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்குள் உட்பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.