வெயாங்கொடையின் சில கிராமங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

வெயாங்கொடையின் சில கிராமங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சில கிராமங்களே இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலுவாபிட்டிய, கூரிகொட்டுவ மற்றும் மாலிகாநெத்த என்னும் கிராமங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயாளிகள் பலர் இந்தப் பகுதிகளில் பதிவானதனைத் தொடர்ந்து இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்டன வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிராமங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ முடியாத வகையில் வீதித் தடைகளை பாதுகாப்பு தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர்.