பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்துள்ள யானை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திம்பிரியத்தாவெல பகுதியில் காட்டு யானை ஒன்று பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றையதினம் ஊருக்குள் புகுந்த காட்டு யானை பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யானையை மீட்குமாறு பொலிஸாரிடமும், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடமும் கிராம மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

யானையை பார்ப்பதற்காக பிரதேச மக்கள் குவிந்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.