கேரள கஞ்சா மற்றும் பணத்துடன் நபரொருவர் கைது

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆழியவளை பகுதியில் கேரள கஞ்சா, ஒரு தொகைப் பணம் என்பவற்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய பளை நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி பரிசோதகர் குலரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 10,765 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 14,500 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் அவரை முற்படுத்தவுள்ளதாகம் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.