அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் குருதி தான முகாம்

Report Print Theesan in சமூகம்

146ஆவது பன்னாட்டு அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் குருதி தானம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த குருதி தான முகாம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற குருதி தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் கலந்து கொண்டு குருதித்தானம் வழங்கி வைத்துள்ளனர்.

பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் மஞ்சுள ஜெயசுந்தர தலைமையில் இடம்பெற்ற குருதி தான முகாம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிவரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.