சட்டமாக மாறவுள்ள சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகள்! பவித்ரா வன்னியாராச்சி

Report Print Steephen Steephen in சமூகம்

சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளை சட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டம் ஏற்கனவே வரையப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை சில நேரம் நாளைய தினம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முக கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளியை பேணுதல் என்பவற்றை கட்டாயமாக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை மீறும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இந்த சட்டம் அமுலாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது வர்த்தக நிலையங்களை நடத்தும் நபர்களுக்கு ஏதுவான வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பித்தக்கது.