28 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் - புதிய ஆய்வு

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்க தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகம் என அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் தெரிவித்துள்ளனர்.

இருளான பின்னணியில் பரிசோதனை நடத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புற ஊதா ஒளிக்கதிர்களால் இந்த வைரஸ் அழியும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் மாறியுள்ள கொரோனா வைரஸை ஒழிக்க பல நாடுகள் பல்வேறு விதமான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அத்துடன் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.