எதிர்வரும் நாட்கள் மிகவும் அபாயகரமானது! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

அடுத்து வரும் 5 நாட்கள் மிகவும் ஆபத்தான காலப்பகுதி என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய சில ஊழியர்கள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். அதன் ஊடாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளன.

தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் குறைவடைந்துள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் 2 - 3 நாட்களில் இது தொடர்பில் ஆராய்ந்து, கம்பஹாவின் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுதல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராணுவ தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.