இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம் - பொலிஸாரிடம் சிக்கிய சஞ்சிகை

Report Print Steephen Steephen in சமூகம்
2298Shares

இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிடைத்த தகவல்களை அடுத்து பொலிஸார், அந்த அச்சகத்திற்கு சென்று சஞ்சிகைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்று இந்த சஞ்சிகைகளை அச்சடிக்க வழங்கியுள்ளது. குறித்த அரபு பாடசாலையில் நடைபெறவிருந்த ஆண்டு விழாவுக்காக இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் இந்த சஞ்சிகைகளை கைப்பற்றியதை அடுத்து குறித்த அரபு பாடசாலைகளின் ஆண்டு விழாவை நடத்துவதை நிறுத்த தீர்மானித்துள்ளது.