தற்காலிகமாக மூடப்பட்ட நீர்கொழும்பு நீதிமன்ற வளாகம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் நடவடிக்கையாக நீர்கொழும்பு நீதிமன்ற வளாகம் மற்றும் தேசிய வருமான வரி அலுவலகம் என்பவற்றை இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள இரண்டு நீதவான் நீதிமன்றங்கள், இரண்டு மாவட்ட நீதிமன்றங்கள், தொழில் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு வரும் மக்களுக்கு இதனை தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் தினமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை நீர்கொழும்பு தேசிய வருமான வரி அலுவலகத்தையும் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.