ஐரோப்பிய லெம்போகினி கார் ஓட்டப் பந்தய போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை வீரர்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை கார் ஓட்டப் பந்தய வீரரான டிலந்த மாலகமுவ நேற்று நடைபெற்ற ஐரோப்பிய லெம்போகினி கார் ஓட்டப் பந்தய போட்டியின் இரண்டாவது போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த கார் ஓட்டப் பந்தய போட்டி ஸ்பெயின் நாட்டின் பாசிலோனாவில் நடைபெற்றிருந்தது.

இதுவரை எந்த அனுசரணையும் இன்றி போட்டிகளில் கலந்து கொண்ட மாலகமுவ இம்முறை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்த போட்டியில் கலந்து கொண்டார்.

அரசாங்கம் வழங்கிய அனுசரணைக்கு அவர் பாசிலோனா நகரில் இருந்து சமூக வலைத்தளம் மூலம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.