ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Report Print Kamel Kamel in சமூகம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மாவட்டத்தில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகள் என்பன திறக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டு வந்தது.

எனினும், இவ்வாறு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகள் மற்றும் மருந்தகங்களையும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலாளரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.