ஹட்டன் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீட்டினுள் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வழங்கிய தகவலை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் 60 வயதான பழணியாண்டி எனவும், இவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும், கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில், மீளவும் தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும், 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை.

மின்சார பட்டியில் வழங்குபவர் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவை தட்டிய போதும் திறக்கப்படவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.