வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்! பொலிஸார் அறிவுறுத்தல்

Report Print Theesan in சமூகம்
45Shares

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

மேலும் வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சுத்தமான தண்ணீரில் 20 வினாடிகள் சவர்க்காரமிட்டு கைகளை கழுவிய பின்னர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சட்ட நடைமுறைகளை பின்பற்ற தவறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், வவுனியா பொலிஸார் இன்று ஒலிபெருக்கி மூலமாக பொது மக்களுக்கு அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரினால் அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 - வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கும், சிறுவர்களை பாதுகாப்பதற்கும் வவுனியா பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

வர்த்தக நிலையங்கங்கள் , வைத்தியசாலைகள் , அரச தனியார், திணைக்களங்கள் , வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

வர்த்தக நிலையங்களுக்குள் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் . வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் 20 வினாடிகள் கை கழுவி வர்த்தக நிலையங்களுக்குள் செல்ல வேண்டும்.

நகரில் அதிகமாக திருடர்கள் நடமாடுவதால் பொது மக்கள் தங்களது தங்க ஆபரணங்களை அணிவதைக் குறைத்துக்கொள்ளுமாறும், சுகாதார சட்ட நடைமுறைகளை பின்பற்றத் தவறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸாரினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.