முல்லைத்தீவில் ஊடகவிலாளர்கள் மீது தாக்குதல்! யாழ். ஊடக அமையம் கண்டனம்

Report Print Ajith Ajith in சமூகம்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை யாழ்ப்பாண ஊடக அமையம் கண்டித்துள்ளது

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 39 பேரினது உயிர்களை ஈகம் செய்தே தமிழ் தேசத்தில் ஊடக பணி முன்னெடுக்கப்படுகின்றது.

ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும், விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் ஊடகவியலாளர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறும் சூழலே முன்னைய காலங்களில் இருந்து வந்திருந்தது.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்படுவது எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை அதிகாரிகளின் உதவியுடனேயே மரக்கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை குறித்த ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனத்தின் உப ஒப்பந்தக்காரர் ஒருவரே இந்த சட்டவிரோத செயலை மேற்கொண்டு வருகிறார். எனவே இந்த நடவடிக்கையை நிறுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யவேண்டும் என்றும் யாழ்ப்பாண ஊடக அமையம் கோரியுள்ளது.