இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்!

Report Print Ashik in சமூகம்

முயல் தீவில் இருந்து இலங்கைக்கு படகின் மூலம் கடத்த இருந்த மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மூட்டைகளில் 506 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மஞ்சளை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்ல இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தீவு பகுதியில் மறைந்துள்ளனரா? அல்லது தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் கடலோர காவல்படை வீரர்கள் தீவுக்குள் வருவதை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா என்பது குறித்து கரை ஓரங்களிலும், தீவு பகுதிகளிலும் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர் பட்டிணம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.