கணவனுக்கு கொரோனா என தெரிந்தும் பணிக்கு சென்ற மனைவியால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

தனது கணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அறிந்தும் பணிக்கு சென்ற பெண்ணால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலையில் பணியாற்றியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவன் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் எனத் தெரிய வந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 42 பேர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் பலர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத ஹொரனை, அனுராதபுரம், ராகம, கனேமுல்ல, இரத்தினபுரி, களுத்துறை, சீதுவ, களனி, கொழும்பு, குருணாகல், பொலநறுவை, நீர்கொழும்பு, இரத்மலானை, நுகேகொட, கடவ மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று விரைவாக பரவி வருகிறது. இது தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

You may like this video