மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் வெளியான புதிய தகவல்..

Report Print Ajith Ajith in சமூகம்
868Shares

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாசலையில் முதலாவது கொரோனா தொற்றாளி கண்டறியப்படுவதற்கு முன்னரே சுமார் 33 பணியாளர்கள் சளி மற்றும் இருமல் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த 33 பேரும் செப்டம்பர் 10- 20 ஆம் திகதி காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட திகதியை திட்டவட்டமாக கூற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முதலாவதாக கொரோனா கண்டறியப்பட்ட பெண் பணியாளர் பயணித்த பாதைகள் மற்றும் அவர் பார்வையிட்ட இடங்களையும் பிற்பற்ற இந்த வைரஸின் தோற்றத்தைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது தனிமைப்படுத்தலின் கீழ் 10,500 க்கும் அதிகமானோர் உள்ளனர், இதில் 2,000 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 51,000 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தவகையில், நாட்டில் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான பணியை தொடர்வதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

You may like this video