கித்துல் மரமொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

வட்டவளை - கரோலினா பகுதியில் கித்துல் மரமொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடொன்று பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் உறங்கி கொண்டிருந்ததாகவும், எனினும் தெய்வாதீனமாக எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

மற்றைய வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் இரு வீட்டிலும் உள்ள பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளதால் அவ்விடங்களில் ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொது மக்கள் இணைந்து வீதியில் கொட்டிக்கிடக்கும் மண்ணை அகற்றி வருகின்றனர்.