பெண்ணொருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பத்தலாகம பகுதி வீடொன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமும், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஹிங்குருவெவ, எல்லவௌ பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆணொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு குறித்த ஆண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.