கொரோனா காரணமாக மூன்று கோடி ரூபா நாளாந்தம் வருமானம் இழக்கும் அரச நிறுவனம்

Report Print Kamel Kamel in சமூகம்

கொரோனா நோய்த்தொற்று பரவுகை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் இலங்கை போக்குவரத்துச் சபை நாளாந்தம் சுமார் மூன்று கோடி ரூபா வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப்பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நாளாந்த வருமானம் 75 மில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த வருமான தொகை 45 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

5100 பேருந்து போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த போதிலும் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பஸ்களின் எண்ணிக்கை 4500 ஆக குறைவடைந்துள்ளது.

உச்ச அளவிலான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.