வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருத்தகத்தை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருத்தகத்தை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம், சாந்தசோலை வீதியில் அமைந்துள்ள துவிச்சக்கர வண்டி திருத்தகம் ஒன்று நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துவிச்சக்கர வண்டி திருத்தக உரிமையாளரால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.