முதல் பெண் பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு நாமல் வாழ்த்து

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜாசிங்காரச்சிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிகச் சிறந்த நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ச பதிவொன்றை இட்டதன் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது சமூகத்தினை பாதுகாக்கும் புதிய பாத்திரமொன்றை வகிப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.