ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்பட்ட கணக்காளருக்கு விளக்கமறியல்

Report Print Ajith Ajith in சமூகம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக 2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை பேருந்துகளில் ஏற்றிச்செல்ல உதவியதாக கூறப்படும் கணக்காளரான அழகரட்ணம் மனோரஞ்சனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு- கிருலப்பனை பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அலுவலரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரிசாத் பதியுதீன் பயன்படுத்திய இரண்டு சிற்றூந்துகள், அவருடைய பொலிஸ் அலுவலரின் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொதுச்சொத்து துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்ய பொலிஸ்க்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு வாகனம் மற்றும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.