அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம் தற்காலிகமானது

Report Print Kamel Kamel in சமூகம்

அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம் தற்காலிகமானது என விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

டின் மீன், பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளின் பெரிய வெங்காயம் உள்ளிட்ட அறுவடைகள் சந்தைக்கு வர முன்னதாக இறக்குமதி நீக்கம் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அனர்த்தம் காரணமாக இவ்வாறு இறக்குமதி வரி நீக்கி மக்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.