ரிசாட்டிற்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை

Report Print Kamel Kamel in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியூதீனுக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிசாட் பதியூதீன் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டே நீதிமன்றம் இவ்வாறு பயணத் தடை விதித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியதாகவும், பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும் ரிசாட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரிசாட் பதியூதீனை கைது செய்வதற்கு காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அமைச்சரின் கணக்காளரான அழகரட்னம் மனோரஞ்சன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.