இலங்கையில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களின் வாழ்க்கை : யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகர்

Report Print Banu in சமூகம்

இலங்கையை பொறுத்த வகையில் ஊடகத்துறையானது மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் ,ஊடக செயற்பாட்டாளருமான இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்மையில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஊடகவியலாளர்கள் இருவரைத் தாக்கியவர்கள் பொலிஸ் மற்றும் வனவள அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமானவர்கள், அவர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒளிப்படங்களும் வெளிவந்திருக்கின்றன.

இதிலிருந்து தெளிவாக தெரிகின்ற ஒரு விடயம் ஏதோவொரு வகையில் அரச நிர்வாகம் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.