ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரனால் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளிநாட்டு பயணங்களை இந்தக் காலப் பகுதியில் மேற்கொள்பவர்கள், தங்களது விமானப் பயணச் சீட்டுக்களை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்களில் சேவைகளை வழங்குவதற்காக செல்லும் பணியாளர்களும் தங்களது பணி அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may like this video