மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்!

Report Print Kumar in சமூகம்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அரச அதிகாரிகளை ஏற்றி வந்த பேருந்து மீது மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று மாலை பயணித்த பேருந்தின் மீதே இன்றிரவு இந்த கல் வீச்சில் நடத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளுக்கான இந்த பேருந்து சேவையானது அண்மையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.