முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Report Print Rakesh in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்காவது தடவையாகவும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று அவர் மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.இந்த சாட்சியம் சுமார் 5 மணித்தியாலயங்களாக நீடித்தது.

இதனையடுத்து நான்காவது தடவையாக ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரசன்னமாகுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மைத்திரிபால, ஒக்டோபர் 5 மற்றும் ஒக்டோபர் 12ம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கியிருந்தார்.

இதற்கு முன்னர் ஆணைக்குழுவுக்கு அவர் பார்வையாளராகவும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.