வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய வாகனம்:ஒருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, வைரவபுளியங்குளம், கதிரேசு வீதியூடாக வைரவப்புளியங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள மீது கதிரேசு வீதி 1ம் ஒழுங்கையூடாக வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில்,வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.