ஒரே விடுதியில் வசிக்கும் வெவ்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்! பொலிஸாரின் கோரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

ஒரே விடுதியில் வசிக்கும் வெவ்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவ்வாறு தங்கியிருப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒரே விடுதியில் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கியிருப்பது கண்டறியப்பட்டடுள்ளதாக அவர் கூறினார்.

வெவ்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரே விடுதியில் தங்கியிருந்தால், ஒரு தொழிற்சாலையிலிருந்து மற்றொரு தொழிற்சாலைக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் விளைவாக விடுதிகளில் தங்கியிருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேறொரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் தங்கியிருந்தால் வெவ்வேறு விருப்பங்களைக் கருத்தில் கொள்வது நல்லது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.